ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் பேச்சுவார்த்தை; ஜெனரலை பதவி நீக்கிய ஸெலென்ஸ்கி

எந்தவொரு ரஷ்ய ஜெனரலையும்விட அதிகமான உக்ரேனிய வீரர்களைக் கொன்றதாக கிழக்கு உக்ரேனின் தலைமை ராணுவத் தளபதியை உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி பதவி நீக்கம் செய்துள்ளார்.

லெப்டினன்ட் ஜெனரல் யூரி சோடோலுக்கு பதிலாக பிரிக் ஜெனரல் ஆண்ட்ரி ஹனாடோவ் நியமிக்கப்பட்டதாக ஜெலென்ஸ்கி திங்கட்கிழமை இரவு வெளியிட்ட காணொளியில் அறிவித்தார்.

உக்ரேனின் மதிப்புமிக்க அசோவ் படைப்பிரிவின் தலைவரான போவ்டான் க்ரோடெவிச், ஜெனரல் யூரி சோடோல், ராணுவப் பின்னடைவுகளையும் வீரர்களுக்கு பெரும் இழப்புகளையும் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டிய ஒருநாளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளுக்காக ஒன்றியத்தில் அமைச்சர்கள் சிலரைச் சந்திக்க கியவ் அதிகாரிகள் லக்சம்பர்க்கிற்கு வந்துள்ள வேளையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

உக்ரேன் உறுப்பினராவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்றாலும், இந்தச் சந்திப்பு இணைப்பு செயல்முறையின் தொடக்கமாக இருக்கும்.

“புட்டின் உக்ரேனை இணைக்க விரும்பினார். மாறாக உக்ரேன் முன்பைவிட இப்போது ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமாக உள்ளது,” என்று கூட்டத்திற்கு முன்னதாக, ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் அன்னாலெனா பேர்பாக் கூறினார்.

இதற்கிடையே, உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின்போது மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்காக, ரஷ்ய முன்னாள் தற்காப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு, ரஷ்ய முன்னணி ஜெனரல் வலேரி ஜெராசிமோவ் ஆகியோருக்கு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) கைது ஆணைகளைப் பிறப்பித்துள்ளது.

ஷோய்கு கடந்த மாதம் தனது தற்காப்பு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ரஷ்யாவின் சக்திவாய்ந்த தற்காப்பு மன்றத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் 2022இல் உக்ரேனுடனான போரைத் தொடங்கியதிலிருந்து தனது ராணுவ அமைப்பில் செய்த மிக முக்கியமான மாற்றம் அது.

(Visited 28 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்