எப்ஸ்டீன் விவகாரம் – ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய வேல்ஸ் இளவரசர்!
ஜெஃப்ரி எப்ஸ்டீன் பற்றிய சமீபத்திய வெளிப்பாடுகளால் வேல்ஸ் இளவரசரும் இளவரசியும் “ஆழ்ந்த கவலையில்” உள்ளனர் என்று கென்சிங்டன் (Kensington) அரண்மனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் வெளியிடப்பட்ட மறைந்த பாலியல் குற்றவாளி தொடர்பான ஆவணங்களில் உள்ள புதிய தகவல்களின் வெளிச்சத்தில் இளவரசர் வில்லியமும் இளவரசி கேத்தரினும் “பாதிக்கப்பட்டவர்கள் மீது கவனம் செலுத்தினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அரண்மையுடன் தொடர்புடைய மவுண்ட்பேட்டன் -வின்ட்சர் எப்ஸ்டீனுடனான உறவு குறித்த புதிய தகவல்கள் கசிந்ததை தொடர்ந்து தனது வின்ட்சர் வீட்டிலிருந்து வெளியேறினார்.
மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் எப்ஸ்டீனுடன் நீண்டகால நட்பைக் கொண்டிருந்தாகவும் கூறப்படுகிறது. எப்ஸ்டீனுடனான தனது கடந்தகால உறவுகளுக்கு அவர் முன்பு மன்னிப்பு கேட்டார், ஆனால் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கடுமையாக மறுத்துள்ளார்.
அமெரிக்காவில் வெளியிடப்பட்ட ஏராளமான ஆவணங்களில், அவர் ஒரு பெண்ணுடன் இருக்கும் ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும் கென்சிங்டன் (Kensington) அரண்மை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மவுண்ட்பேட்டன்-வின்ட்சரைப் பற்றி நேரடியாகக் குறிப்பிடவில்லை.
இளவரசர் வில்லியம் சவுதி அரேபியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணத்தைத் தொடங்கத் தயாராகி வருவதால் இது வெளியிடப்பட்டது, இது இராஜதந்திர ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.





