பல தசாப்தங்களுக்கு நினைவாற்றலைப் பாதுகாக்கும் முட்டை – ஆய்வில் வெளியான தகவல்
மூளை ஆரோக்கியம் மற்றும் நினைவாற்றலைப் பாதுகாப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள சமீபத்திய ஆய்வு ஒன்று, புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, வாரத்திற்கு ஒரு முட்டைக்கு மேல் சாப்பிடுவது, அல்சைமர் நோய் உருவாகும் அபாயத்தை 47 சதவீதம் வரை குறைக்கும் என்பதை இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்களின் தகவலின்படி, முட்டையில் உள்ள முக்கியமான ஊட்டச்சத்துக்களான கோலின் (Choline), வைட்டமின் பி12, லுடீன் (Lutein) மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் (Omega-3 Fatty Acids) ஆகியவை நினைவாற்றலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இது நினைவாற்றல் மற்றும் கற்றலுக்கு அவசியமான அசிடைல்கொலின் (Acetylcholine) என்ற நரம்பியக்கடத்தியின் (Neurotransmitter) உற்பத்தியை அதிகரிக்கிறது.
இது மூளை சிதைவு அபாயத்தை அதிகரிக்கும் ஹோமோசைஸ்டீனின் (Homocysteine) அளவைக் குறைக்கிறது. மேலும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து (Oxidative Stress) மூளையைப் பாதுகாக்கிறது.
வாரத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை உட்கொண்டவர்கள், அறிவாற்றல் செயல்திறன் சோதனைகள், நினைவாற்றல் மீட்டெடுப்பு மற்றும் கவனம் செலுத்தும் திறன் ஆகியவற்றில் சிறந்த முடிவுகளைக் காட்டினர்.
இவர்களுக்கு குறைவான மூளை சுருக்க விகிதங்கள் மற்றும் தாமதமான மனச் சரிவு ஆகியவையும் காணப்பட்டதாக ஆய்வு குறிப்பிட்டது.





