நட்சத்திர மீன் விமான நிலையம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
உலகின் மிகப் பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்ட விமான நிலையங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா?
சீனாவில் 2019 இல் திறக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஒற்றைக் கட்டிட விமான நிலைய முனையம், 13.4 பில்லியன் டாலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்கு நட்சத்திர மீன் என செல்லப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஒரு பெரிய விரிவாக்கத்தை உள்ளடக்கிய இந்த விமான நிலையம் ஜூன் 2019 இல் முடிக்கப்பட்டு அந்த ஆண்டு செப்டம்பரில் செயல்படத் தொடங்கியது.
இது நான்கு சிவிலியன் ஓடுபாதைகள் மற்றும் ஒரு இராணுவ ஓடுபாதையைக் கொண்டுள்ளது. ஆனால் இதை ஏழு ஓடுபாதைகளாக விரிவுபடுத்த ஏற்கனவே திட்டங்கள் உள்ளன என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பெய்ஜிங் மற்றும் லாங்ஃபாங், ஹெபேயின் எல்லையில் அமைந்துள்ள டாக்சிங் சர்வதேச விமான நிலையம் (பிகேஎக்ஸ்) சீனாவின் தலைநகருக்கு சேவை செய்யும் இரண்டு சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாகும்.
ஏறக்குறைய ஐந்து வருட கட்டுமானப் பணிகளுக்குப் பிறகு, 18 சதுர மைல் நிலப்பரப்பில் அமைந்துள்ள 7.5 மில்லியன் சதுர அடி முனையம், 2020 ஆம் ஆண்டில் சிறந்த சுகாதார நடவடிக்கைகளுக்காகவும், அளவு மற்றும் பிராந்தியத்தில் சிறந்தது என்பதற்கான விருதினையும் வெற்றிக் கொண்டது.
இருப்பினும் இதனை விட இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையம் பயணிகள் போக்குவரத்தின் அடிப்படையில் மிகப்பெரிய விமான நிலையமாகும்.
இதற்கிடையில், சவுதி அரேபியாவில் உள்ள கிங் ஃபஹ்த் சர்வதேச விமான நிலையம் நிலப்பரப்பின் அடிப்படையில் மிகப் பெரிய விமான நிலையமாகும், இது கிட்டத்தட்ட NYC இன் ஐந்து பெருநகரங்களின் அளவை சமன் மற்றும் மான்செஸ்டரை விட ஏழு மடங்கு பெரியது.