ஆஸ்திரேலியாவில் குற்றச்சாட்டில் இருந்து தப்பிய தனுஷ்க குணதிலக்க
ஆஸ்திரேலியாவில் இளம் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க அந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த தீர்ப்பை சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சாரா ஹாகெட் அறிவித்தார். குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என நீதிபதி தீர்ப்பளித்தார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கையில் நடைபெற்ற T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்ற வந்த போது, டேட்டிங் விண்ணப்பம் மூலம் அடையாளம் காணப்பட்ட இளம் பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததாக தனுஷ்க குணதில மீது முதலில் 04 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
எனினும் 03 குற்றசாட்டுகள் பின்னர் நீக்குவதற்கு ஆஸ்திரேலிய சட்ட திணைக்களம் நடவடிக்கை எடுத்தது.
இளம் பெண்ணின் அனுமதியின்றி பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் மட்டுமே இந்த விசாரணை நடத்தப்பட்டது.
தனுஷ்க குணதிலக்கவுக்கு ஆரம்பத்தில் சமூக ஊடகங்களில் தடை விதிக்கப்பட்டதுடன், அவர் தங்கும் இடத்தை விட்டு வெளியே செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது, ஆனால் பின்னர் அந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பில் தனுஷ்க குணதிலவுக்கு விளையாட்டு போட்டிகளில் இருந்து தடை விதிக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.