டெல்லியில் கடும் பனிமூட்டம் – விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகள் பாதிப்பு
இந்தியாவின் டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் 110 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் 200 க்கும் மேற்பட்ட விமானங்கள் இன்று காலை தாமதமாகியுள்ளன.
கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் கடும் பனிமூட்டம் நிலவி வரும் நிலவி வரும் நிலையில் வட இந்தியாவின் சில பகுதிகளில் நிலவும் பனிமூட்டம் காட்சி தெளிவின்மையை உருவாக்குவதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆணையத்தின் அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
“பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களிடமிருந்து அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் விமானப் பயணத் தகவல்களைச் சரிபார்க்கவும், விமான நிலையப் பயணம் மற்றும் நடைமுறைகளுக்குக் கூடுதல் நேரத்தை ஒதுக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வெளியிட்ட பயணிகளுக்கான ஆலோசனையில், “டெல்லி விமான நிலையத்தின் செயற்பாடுகள் இயல்பாகவே தொடர்கின்றன.
புதுப்பிக்கப்பட்ட விமான அட்டவணைகளுக்கு, உங்கள் விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளவும் அல்லது அதிகாரப்பூர்வ விமான நிலைய வலைத்தளத்தைப் பார்வையிடவும். அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பான மற்றும் சிறப்பான பயணத்தை மேற்கொள்ள நாங்கள் வாழ்த்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





