ரணில் மீது குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்ய தீர்மானம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் நிறைவடையும் என்றும், மார்ச் மாதத்தில் முறையான குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்படும் என்றும் சட்டமா அதிபர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் ரணில் விக்கிரமசிங்க இன்று நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகினார்.
இதன்போது சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்த சமர்ப்பணத்தை முன்வைத்தார்.
தொடர்புடைய செய்தி




