பிரித்தானியாவில் இனங்காணப்பட்டுள்ள ஆபத்தான நுளம்பு இனங்கள் – மக்களுக்கு எச்சரிக்கை!
பிரித்தானியாவில் கொடிய நோய் தொற்றுக்களை பரப்பப்கூடிய 02 வகையான நுளம்புகள் இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Aedes aegypti, Aedes albopictus ஆகிய நுளம்பு இனங்களே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளன.
இந்த நுளம்பு இனங்கள் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா மற்றும் ஜிகா வைரஸ்களைப் பரப்பக்கூடும் என்று அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னர் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் துணை வெப்பமண்டலப் பகுதிகளில் மட்டுமே இனங்காணப்பட்ட இந்த நுளம்பு இனங்கள் தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.
தற்போது குறித்த இன நுளம்புகளால் பிரித்தானியாவில் எவ்வித பாதிப்பும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் இவற்றின் பரவலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வெப்பமான காலக்கட்டத்தில் இதன் பரவல் அதிகரிக்கக்கூடும் என்றும் இதன் விளைவாக அதிகளவிலான நோய் தாக்கம் ஏற்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





