பிரித்தானியாவில் தற்செயலாக விடுவிக்கப்பட்ட ஆபத்தான குற்றவாளி!
பிரித்தானியாவில் பாலியல் குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்து வந்த அல்ஜீரிய (Algeria) பிரஜை ஒருவர் தவறுதலாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தவறுதலாக விடுவிக்கப்பட்ட நபரின் பெயர் பிராஹிம் கடூர்-செரிஃப் (Brahim Kaddour-Cherif) என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக ஹடுஷ் கெபாடு ( Hadush Kebatu) என்ற குற்றவாளி தவறுதலாக விடுதலை செய்யப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் மற்றுமொரு சம்பவம் பதிவாகியுள்ளது.
பிராஹிம் கடூர்-செரிஃப் (Brahim Kaddour-Cherif) மதிய உணவின்போது மாயமானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பெருநகர காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது அவர் நேற்று தவறுதலாக விடுதலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது. அவரை மீளவும் கைது செய்ய தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்வாறான தற்செயலான விடுதலை குறித்து ஒரு சுயாதீன விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக டேம் லின் ஓவன்ஸின் (Dame Lynne Owens’) தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் சிறை கைதிகளை எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் தொழிற்கட்சி அரசாங்கத்தின் பணிப்புரையின் கீழ் சிறிய குற்றச்செயல்களை மேற்கொண்ட பலர் விடுவிக்கப்பட்டனர்.
இவ்வாறான விடுதலையில் நீண்டநாள் குற்றவாளிகளும் தற்செயலாக விடுவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





