மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!
 
																																		முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சிக்கு பிணை வழங்கி கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, சந்தேக நபரை 50000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையிலும் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
எவ்வாறாயினும், சந்தேக நபருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படுவதாகவும் நீதவான் அறிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
28 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முறைக்கேடாக ஈட்டியதாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
        



 
                         
                            
