உலகம் செய்தி

காடுகளில் இயற்கையாகவே உருவாகும் கொரோனா வைரஸ் – மனிதர்களுக்கு ஆபத்தா?

தென் அமெரிக்காவில் வௌவால்களில் இருந்து புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது கொரோனா தொற்றுநோய்க்கு காரணமான வௌவால்களை மிகவும் ஒத்திருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜப்பானிய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் வடக்கு பிரேசிலில் வௌவால்களின் எண்ணிக்கையை ஆராய்ச்சி செய்தபோது இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பீட்டாகொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த BRZ batCoV என்ற வைரஸைக் கண்டறிந்துள்ளனர்.

மனிதர்களுக்கு பரவியமை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும்  வௌவால்களிடமிருந்து மக்களுக்கு வைரஸ் பரவும் தொடர்ச்சியான அச்சுறுத்தல் குறித்து ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இப்பகுதியில் கூடுதலாக பாதிக்கப்பட்ட வௌவால்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

தொற்றுநோய் திறன்களைக் கொண்ட கொரோனா வைரஸ்கள் காடுகளில் எவ்வாறு இயற்கையாகவே உருவாக முடியும் என்பதை இந்த கண்டுபிடிப்புகள் நிரூபிப்பதாக  விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கண்டுப்பிடிப்பு சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

(Visited 7 times, 8 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி