அரசாங்கத்தை கவிழ்க்க சதி: ஷேக் ஹசீனா மீது வழக்கு

முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாகவும், உள்நாட்டு ஊழல் செய்ததாகவும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் 72 அவாமி லீக் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டாக்கா தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணை நடத்தும் என்று பொலிசார் அறிவித்தனர்.
டிசம்பர் 19 அன்று அவாமி லீக் தலைவர்கள் ஜாய் பங்களா படைப்பிரிவு என்ற ஆன்லைன் கூட்டத்தை கூட்டினர்.
உள் அரசியல் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க ஹசீனாவின் திட்டத்திற்கு வலுவான ஆதரவை அந்தக் கூட்டம் உறுதிப்படுத்தியது.
ஹசீனா மற்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட பிற பிரமுகர்களின் குரல் செய்திகள் மூலம் சதித்திட்டம் வெளிப்பட்டதாக அரசாங்க செய்தி நிறுவனமான BSS தெரிவித்துள்ளது.
அவாமி லீக்கின் அமெரிக்க பிராந்திய துணைத் தலைவர், ரப்பி ஆலம் அழைப்பு விடுத்த கூட்டத்தில் பங்களாதேஷ் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 577 பேர் பங்கேற்றனர்.
மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து தனது 16 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர் நாட்டை விட்டு வெளியேறிய ஹசீனா, இந்தியாவில் அடைக்கலம் கோரியுள்ளார்.