இங்கிலாந்தில் தரமற்ற வீட்டு வசதிகள் தொடர்பில் முறைப்பாடு!
இங்கிலாந்தில் தரமற்ற வீட்டு வசதிகள் குறித்த முறைப்பாடுகள் கடந்த 05 ஆண்டுகளை விட தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில், ஆபத்தான பூஞ்சைகள் மற்றும் காளான்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
10 வேலைநாட்களுக்குள் முறைப்பாடு அளித்த குத்தகைதாரர்கள், சொத்துக்களை பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வீடுகளைப் பாதுகாப்பாக வைக்க முடியாவிட்டால் மாற்று தங்குமிட வசதிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்குறித்த ஆபத்துக்களை ஆய்வு செய்து குத்தகை தாரர்கள் எழுத வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தொண்டு நிறுவனமான ஷெல்டரால் (housing charity Shelter), குத்தகைதாரர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு உண்மையான ஆபத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, மேலும் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது” என்று கூறியது.





