பிரான்ஸ் எல்லையில் புலம்பெயர்ந்தோருக்கும், காவல்துறையினருக்கும் இடையில் மோதல்!
பிரான்ஸில் நூற்றுக்கணக்கானோர் இன்று காலை ஆங்கிலக்கால்வாயை கடக்க முற்பட்ட நிலையில் பிரான்ஸ் காவல்துறையினருக்கும், குடியேறிகளுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 700 குடியேறிகள் சிறிய படகில் ஆங்கிலக் கால்வாயை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பிரான்ஸ் காவல்துறையினர் புலம்பெயர்ந்தோர் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தியதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை 41000 புலம்பெயர்ந்தோர் சட்டவிரோதமாக ஆங்கிலக் கால்வாயை கடந்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உள்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் ஒருவர், இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்டவிரோதமாக இங்கு வந்த கிட்டத்தட்ட 50,000 பேரை நாங்கள் அகற்றியுள்ளோம்.
மேலும் பிரான்ஸுடனான எங்கள் வரலாற்று ஒப்பந்தம் மூலம் சிறிய படகுகளில் பிரித்தானியா வருபவர்கள் மீளவும் திருப்பியனுப்பப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.





