ஸ்பெயினில் 142 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாத தேவாலயம்!
 
																																		ஸ்பெயினில் உள்ள சாக்ரடா ஃபேமிலியா (Sagrada Família) உலகின் மிக உயரமான தேவாலயமாக மாறியுள்ளது.
சிலுவையின் முதல் பகுதி பார்சிலோனாவில் கட்டுமானத்தில் உள்ள மைய கட்டிடத்தின் உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த தேவாலயத்தின் தற்போதைய உயரம் 162.91 மீட்டராகும்.
இதன் மூலம், 135 ஆண்டுகளாக (1890 முதல்) உலகின் மிக உயரமான தேவாலயமாக இருந்த ஜெர்மனியில் உள்ள உல்ம் மினிஸ்டரின் (Ulm Minster) சாதனை அதிகாரப்பூர்வமாக முறியடிக்கப்பட்டுள்ளது.
சாக்ரடா ஃபேமிலியா (Sagrada Família) தேவாலயம் உலகின் மிகப்பெரிய முடிக்கப்படாத கத்தோலிக்க தேவாலயமாகும், மேலும் இது 143 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமான பணிகள் நிறைவடையாமல் உள்ளது.
அதன் பிரதான கட்டிடம் அடுத்த ஆண்டு கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் மாதங்களில் சிலுவையின் மீதமுள்ள பகுதிகள் சேர்க்கப்படுவதால், சாக்ரடா ஃபேமிலியா (Sagrada Família) தேவாலயத்தின் மொத்த உயரம் 172 மீட்டராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
        



 
                         
                            
