அமெரிக்க பிரதிநிதி வந்துசென்ற கையோடு சீன பிரமுகரும் கொழும்பு வருகை!
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு துணைத் தலைவர் வாங் டோங்மிங் , கொழும்பில் முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.
மூன்று நாள் பயணமாக நேற்று கொழும்பு வந்த அவரை, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, விமான நிலையம் சென்று வரவேற்றார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் பல அதிகாரிகளும் இந்த வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
சீனா தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு துணைத் தலைவர் வாங் டோங்மிங் , இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய உதவிகளை வழங்கிவருகின்றது.
அமெரிக்காவும் விசேட பிரதிநிதியொருவரை கொழும்புக்கு அனுப்பி இருந்தது. இந்நிலையிலேயே சீனாவும் முக்கிய பிரமுகர் ஒருவரை கொழும்பில் களமிறக்கியுள்ளது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை, சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்கு தயாராகிவரும் நிலையில், சர்வதேச பிரமுகர்களின் வருகை முக்கியத்துவம்மிக்கதாக அமைந்துள்ளது.




