சீனாவின் இரகசிய பொலிஸ் நிலையங்கள் – பிரித்தானிய அரசின் அதிரடி உத்தரவு!

பிரித்தானிய மண்ணில் சீனா தனது இரகசிய பொலிஸ் நிலையங்களை மூடுமாறு பிரித்தானிய அரசாங்கம் கடுமையாக வலியுறுத்தியுள்ளது.
இதனை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் டாம் டுகென்ட் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் சீனா பொலிஸ் நிலையங்களை நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சீன தூதரகத்தின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் சீனா தனது காவல் நிலையத்தை எந்த வடிவத்திலும் இயக்கக் கூடாது என்று கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதுள்ள அனைத்து நிலையங்களும் மூடப்பட்டுவிட்டதாகவும், பிரித்தானிய சட்டத்தின் கீழ் செயல்படுவோம் என்றும் சீன தூதரகம் பதிலளித்துள்ளது.
(Visited 13 times, 1 visits today)