இலங்கையில் 2 நாட்களின் பின்னர் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
இலங்கையில் இன்று தங்க விலை சற்று குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 2 நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில், இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
2 நாட்களுக்கு முன், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 317,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இன்று 1,000 ரூபாயால் குறைந்து 316,000 ரூபாயாக விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 316,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 290,000 ரூபாயாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 237,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,525 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 36,250 ரூபாயாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 29,625 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.





