காசா பகுதியில் போர் நிறுத்தம் அமலில் – இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு

காசா பகுதியில் போர் நிறுத்தம் அமலில் இருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
அமைதித் திட்டத்திற்கு ஒப்புக்கொண்ட பிறகு, காசா பகுதியில் உள்ள பல பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய அதிகாரிகள் தங்கள் படைகளை திரும்பப் பெறத் தொடங்கியுள்ளனர்.
அதன்படி, காசா பகுதியின் வடமேற்குப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவக் குழுக்களை திரும்பப் பெற இஸ்ரேலிய அதிகாரிகள் செயற்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசா பகுதியில் இராணுவக் குழுக்களை திரும்பப் பெறும் செயல் அந்த பகுதியில் இஸ்ரேலியக் கட்டுப்பாட்டின் கீழ் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் திட்டமிட்ட இடத்திற்குள் மட்டுமே நடைமுறைக்கு வரும். அதாவது படைகள் விட்டு செல்லும் இடம் முழுமையாக இஸ்ரேலிய பாதுகாப்பு கட்டுப்பாட்டில் இருக்குமென்று உயர்நிலைய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
அமைதி ஒப்பந்தத்தில் இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.