ஹாங்காங்கில் விபத்துக்குள்ளான சரக்கு விமானம் – இருவர் உயிரிழப்பு
ஹாங்காங் (Hong Kong) விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது ஒரு சரக்கு விமானம் ஓடுபாதையை விட்டு விலகி கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விபத்திற்கான காரணத்தை அறிய கருப்பு பெட்டியை தேடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.
30 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 41 வயதுடைய மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக ஹாங்காங் விமானத்துறை தெரிவித்துள்ளது.
துபாயில் இருந்து ஹாங்காங் வந்த போயிங் 747 சரக்கு விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.





