காசாவில் கொலை செய்யப்பட்ட கனேடியர் – ஒரு வயது குழந்தையின் தந்தை என தகவல்
காசாவில் திங்கட்கிழமை இஸ்ரேலிய இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 உதவிப் பணியாளர்கள் பலியாகிய நிலையில் அவர்களுக்குள் கனேடியரும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் காசாவில் கொல்லப்பட்ட கனடியர் அடையாளம் காணப்பட்டுள்ளார். பலியான கனடியர் 33 வயதான Jacob Flickinger என குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டார்.
பலியானவர் Quebec மாகாணத்தை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் என தெரியவருகிறது. அவர் ஒரு வயது மகனின் தந்தையாவார். Jacob Flickinger கனடிய அமெரிக்க இரட்டை குடியுரிமை பெற்றவராகும்.
Quebecகின் Royal 22e படைப்பிரிவில் காலாட்படை உறுப்பினராக இவர், கனடிய இராணுவத்தில் பணியாற்றினார் என்பதை கனடிய ஆயுதப் படையினர் புதன்கிழமை உறுதிப்படுத்தினர்.
2008 முதல் 2019 வரை அவர் இராணுவத்தில் பணியாற்றினார் என கனடிய ஆயுதப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மார்ச் மாதத்தின் ஆரம்பம் முதல் World Central Kitchen தொண்டு நிறுவனத்திற்காக Jacob Flickinger தொண்டாற்றி வருகிறார்.
இவர்கள் மீதான தாக்குதல் உதவி பணியாளர்களை இலக்கு வைக்கப்பட்டது என Jacob Flickingerரின் பெற்றோர் கூறுகின்றனர்.
இந்த நிலையில் இந்த தாக்குதல் ஒரு சோகமான தவறு என இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu தெரிவித்துள்ளார்.