அடுத்த மாதம் இந்தியா செல்லும் கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்

கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் அடுத்த மாதம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அங்கு அவர் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை சந்திப்பார் என்று கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வருகைக்கான திகதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை, மேலும் இரு தரப்பினரும் விஜயத்திற்கான திகதியை திட்டமிட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மார்க் கார்னியுடன் சந்தித்ததைத் தொடர்ந்து ஒட்டாவாவிற்கும் புது தில்லிக்கும் இடையே பதற்றம் தணிந்த நிலையில் இந்த சந்திப்பு அறிவிப்பு வந்துள்ளது.
பிரதமர்களின் சந்திப்பிலிருந்து, இரு நாடுகளும் இருதரப்பு உறவுகளை மீட்டெடுக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றன குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)