ரஷ்யாவின் சரக்கு விமானத்தை சுவீகரித்துள்ள கனடா
கனடிய அரசாங்கம், ரஸ்யாவின் சரக்கு விமானமொன்றை சுவீகரித்துள்ளது. கனடாவின் றொரன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் தரித்து நின்ற சரக்கு விமானமே இவ்வாறு சுவீகரிக்கப்பட்டுள்ளது.
ரஸ்யாவில் பதிவு செய்யப்பட்ட குறித்த சரக்கு கப்பல் கடந்த ஓராண்டு காலமாக கனடாவின் பியர்சன் விமான நிலையத்தில் தரித்து நிற்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்டனோவ் 124 ரக விமானமொன்றே இவ்வாறு கனடிய அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளது.இந்த சரக்கு விமானத்தின் உரிமையைக் கொண்டிருக்கும் இரண்டு நிறுவனங்களும் கனடாவில் தடை செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக குறித்த நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.சீனாவிலிருந்து கனடா வந்த விமானம் நாடு திரும்ப முயற்சித்தபோது, கனடா, ரஸ்யாவிற்கான வான்வழிப் பாதைகளை முடக்கியிருந்தது.இதனால் நீண்ட காலமாக இந்த விமானம் பியர்சன் விமன நிலையத்தில் தரித்து நின்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் விமானத்தை நீண்ட காலம் தரித்து நிறுத்தியமைக்காகவும் தாமதக் கட்டணமொன்றை நிறுவனங்களிடமிருந்து அறவீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.