தினமும் முட்டை சாப்பிடலாமா? – ஆராய்ச்சியாளர்கள் விடுக்கும் எச்சரிக்கை
ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவது பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், முட்டையின் மஞ்சள் கருவில் காணப்படும் கொழுப்பு அமிலங்கள், குறிப்பாக LDL (கெட்ட கொழுப்பு) அளவை அதிகரிக்கக்கூடும் என்று புதிய மெட்டா பகுப்பாய்வு ஆராய்ச்சி எச்சரிக்கிறது.
2020ஆம் ஆண்டு மான்-யுன் லி தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில், ஒரு நாளைக்கு முட்டை சாப்பிட்டவர்களில் இரத்த LDL அளவு சுமார் 8 mg/dL உயர்ந்தது என தெரியவந்தது.
அதேசமயம், HDL (நல்ல கொழுப்பு) அளவில் கணிசமான மாற்றம் காணப்படவில்லை. இந்த அளவிலான மாற்றம், குறிப்பாக இதய நோயாளிகள் அல்லது உடலில் கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்குப் பாதகமாக இருக்கக்கூடும்.
மேலும், தினமும் மூன்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் சாப்பிடும்போது LDL/HDL விகிதத்தைப் பாதிக்கக்கூடும் என்பதையும் ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
சமச்சீர் உணவில் ஒரு முட்டை வரை நுகர்வது பெரும்பாலானோருக்குப் பாதுகாப்பானது. இருப்பினும், இதய நோய், உயர் கொழுப்பு, அல்லது மரபணு காரணமாக இந்த ஆபத்தில் உள்ளவர்கள், முட்டை சாப்பிடுவதற்கான எண்ணிக்கையைக் குறைத்து, மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.





