இலங்கை

மருந்துகளின் விலையை குறைக்க அமைச்சரவை ஒப்புதல்!

மருந்துகளின் விலையை குறைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி  ஜூன் மாதம் 15 ஆம் திகதி 2023 முதல் 60 மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை குறைக்கவும், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் மருந்துகளின் விலையை மறுபரிசீலனை செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று (ஜூன் 06) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைக்காலமாக கணிசமான அளவில் அதிகரித்ததன் விளைவாக சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் தாம் முன்வைத்த பிரேரணைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப்பிட்டார். அதன்படி, 60 மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை ஜூன் 15 முதல் 16% குறைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கருத்தில் கொண்டு, பல சந்தர்ப்பங்களில் மருந்துகளின் சில்லறை விலை 97 வீதம் வரை உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்