இந்தியாவிற்கு ஏவுகணைகளை வழங்குவதற்கான 606 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரிட்டன்

இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் ஆழமாகிவரும் தற்காப்புப் பங்காளித்துவத்தின் ஒரு பகுதியாக, இந்திய ராணுவத்திற்கு பிரிட்டன் தயாரித்த இலகுரக ஏவுகணைகளை வாங்குவதற்கான 350 மில்லியன் பவுண்ட் (S$606 மில்லியன்) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை மும்பையில் இன்று ( 9) சந்தித்த நிலையில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்“இந்த ஒப்பந்தம் பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையே பரந்த ஆயுத பங்காளித்துவத்திற்கு வழிவகுக்கிறது. தற்போது இதுகுறித்து இரு அரசுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது,” என்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்ப்ட்டுள்ளது.
கடந்த 12 மாதங்களாக ஸ்டார்மர், பிரிட்டனின் தற்காப்புத் துறையில் கவனம் செலுத்தி, பொருளியல் வளர்ச்சியை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறார்.
மேலும், பிரிட்டனைச் சேர்ந்த ஒன்பது பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் தங்களது கல்வி வளாகங்களை திறக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.