ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா – 30 ஆண்டுகள் ஆகியும் கெட்டு போகாமல் இருக்கும் மெக்டொனால்ட் பர்கர்!

மெக்டொனால்ட் நிறுவனத்தின் சுமார் 30 ஆண்டுகள் பழைய பர்கரை இப்போது கண்டறிந்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் அது இன்னும் கெட்டுப் போகவில்லையாம்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாஸ்ட் புஸ்ட் நிறுவனம் என்றால் அது மெக்டொனால்ட் தான்.. இந்த மெக்டொனால்ட் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது பர்கர் தான். இவை பொதுவாகவே சில நாட்கள் வரை கெட்டுப்போகாது.மேலும், டேஸ்ட்டும் சூப்பராகவே இருக்கும் என்று கூறுவார்கள். ஆனால், இங்கே ஆஸ்திரேலியாவில் ஒரு பர்கர் சுமார் 30 ஆண்டுகளாகக் கெட்டுப்போகாமல் இருக்கிறதாம். மேலும், பார்க்க நேற்று செய்த பர்கரை போல பிரஷ்சாகவும் இருக்கிறத .

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேசி டீன் மற்றும் எட்வார்ட்ஸ் நிட்ஸ் ஆகியோர் கடந்த 1995ஆம் ஆண்டில் அடிலெய்டில் உள்ள மெக்டொனால்ட் உணவகத்தில் சீஸ் உடன் கூடிய இந்த குவார்ட்டர் பவுண்டர் பர்கரை வாங்கியுள்ளனர். இது குறித்து அந்த இளைஞர்கள் கூறுகையில், “அப்போது நாங்கள் இளைஞர்கள்.. நாங்கள் நிறைய உணவுகளை ஆர்டர் செய்துவிட்டோம். இருப்பினும், அது அளவுக்கு அதிகமாகப் போய்விட்டது.. இதனால் அந்த பர்கரை என்ன செய்யலாம் என ஈலோசித்தோம். அப்படி நாங்கள் பேசும் போது இதை அப்படியே வைத்திருந்தால் என்ன நடக்கும் என்று யோசித்தோம்.. அதைத் தான் செய்தோம்” என்கிறார்கள்.

Oldest Burger in the World? 24-Year-Old McDonalds Quarter Pounder  Reportedly Found in Australia

சுமார் 30 ஆண்டுகள் ஆகும் நிலையில், இப்போது அந்த பர்கரை அவர்கள் “McFossil” என்று அழைக்கிறார்கள். இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் அதில் நுண்ணுயிர் வளர்ச்சியின் அறிகுறிகள் தென்படவில்லை. மேலும், கெட்டுப்போன வகையில் வாசம் கூட அதில் இருந்து வரவில்லை. இருப்பினும், முதலில் வாங்கப்பட்ட போது இருந்த சைஸ் உடன் ஒப்பிடுகையில் இதன் சைஸ் சிறிது குறைந்துள்ளதாம்.

இந்த பர்கரை இத்தனை ஆண்டுகள் சேமித்து வைக்க அவர்கள் ஸ்பெஷலாக எதையும் செய்யவில்லை. பெரும்பகுதி அந்த பர்கர் சாதாரண கப் போர்ட்டில் கண்டெய்னர் ஒன்றில் தான் வைத்துள்ளனர். ஆனாலும் அந்த பர்கருக்கு எதுவுமே ஆகவில்லையாம். சில சமயம் எலி அங்கிருந்த மற்ற பொருட்களை எல்லாம் சாப்பிட்டு இருக்கிறது. ஆனால் பர்கரை சாப்பிடவில்லையாம்.

இது உலகின் மிகப் பழமையான மெக்டொனால்டு பர்கர் என்று அழைக்கப்படுகிறது. இதேபோல ஐஸ்லாந்தில் ஒரு கண்ணாடி பெட்டியில் பத்தாண்டுகள் பழமையான சீஸ் பர்கர் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆஸ்திரேலியாவில் உள்ள இந்த இரண்டு பர்கர் அதை விடப் பழையதாக இருக்கிறது. அதிலும் குளிர்சாதனப் பெட்டியில் கூட வைக்காமல் இந்த பர்கர் அப்படியே இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.. இதைப் பார்த்து பலரும் வியந்து போய் உள்ளார்கள். அதேநேரம் சிலர் இது பார்க்க நம்பும்படி இல்லை என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள்

(Visited 16 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித