விண்வெளியில் சிக்கிய சுனிதாவை மீட்கும் முயற்சியில் மீண்டும் பாதிப்பு

விண்வெளியில் சிக்கிக்கொண்ட சுனிதா உள்ளிட்ட இருவரை நாசா வீரர்களைப் பூமிக்குக் கொண்டு வரும் Nasa-SpaceX முயற்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள Cape Canaveral விண்வெளி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு அதற்குக் காரணமாகும்.
விண்கலனில் 4 புதிய விண்வெளி வீரர்களை அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு அனுப்பத் திட்டமிடப்பட்டது.
அங்கு மாட்டிக்கொண்ட சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரைப் பூமிக்குக் கொண்டுவருவது திட்டமாகும். அவர்கள் இருவரும் சென்ற ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து விண்வெளியில் உள்ளனர்.
அவர்கள் பயணம் மேற்கொண்ட போயிங் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அவர்களால் பூமிக்குத் திரும்ப முடியவில்லை.
அவர்களை அழைத்து வரும் விண்கலன் நேற்று புறப்பட்டிருந்தால் அவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் பூமியை வந்தடைந்திருக்கலாம்.
விண்கலன் இன்று புறப்படலாம். ஆனால் அதற்குள் கோளாறு சரிசெய்யப்படுமா என்பது தெரியவில்லை.