பிரித்தானியாவில் வீதிகளில் தவிக்கும் புகலிட கோரிக்கையாளர்கள்!
பிரித்தானியாவில் குளிர் காலநிலை ஆரம்பமாகியுள்ள நிலையில் வீடற்ற பலர் பல இன்னல்களை அனுபவித்து வருவதாக லண்டனில் அமைந்துள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் உள்துறை அலுவலகம் புகலிட விடுதி சோதனையை தற்காலிகமாக 56 நாட்களுக்கு நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
அதேநேரம் அகதிகள் புகலிட விடுதியை காலி செய்ய 28 நாள் அறிவிப்பு காலத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதற்கிடையில் வீடற்ற அகதிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் பாதுகாப்பான புகலிடத்தை கண்டுப்பிடிக்க கடுமையாக போராடி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு சில அகதிகளுக்கு நகரும் காலங்களை நீட்டிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.




