பாகிஸ்தானின் முதல் பாதுகாப்புப் படைத் தளபதியாக அதிகாரம் பெறும் அசிம் முனீர்
நாட்டின் முதல் பாதுகாப்புப் படைத் தலைவராக(CDF) ஐந்து ஆண்டுகளுக்கு ஃபீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீரை(Field Marshal Syed Asim Munir) நியமிக்க பாகிஸ்தான் ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
“பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீரை 5 ஆண்டுகளுக்கு பாதுகாப்புப் படைத் தலைவராகவும் அதே நேரத்தில் ராணுவத் தலைமைத் தளபதியாகவும் நியமிக்க ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி(Asif Ali Zardari) ஒப்புதல் அளித்துள்ளார்” என்று அலுவலகம் Xல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு படைத் தலைவர் பதவி என்பது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என மூன்றையும் கட்டுப்படுத்த வழிவகுக்கும்.
இதுவரை மூன்று படைகளுக்கான அதிகாரம் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை கட்டுப்பாட்டில் இருந்தது. இனி அந்த அதிகாரம் ஒரு நபரின் கீழ் வரும்.




