செய்தி விளையாட்டு

Asia Cup – வங்கதேச அணிக்கு எதிராக 168 ஓட்டங்கள் குவித்த இந்தியா

17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் துபாயில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்காளதேசம் மோதி வருகின்றன்.

இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், அபிஷேக் சர்மா களமிறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதிரடியாக ஆடிய தொடக்க வீரர் அபிஷேக் 37 பந்துகளில் 75 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார். அதேவேளை, பொறுப்புடன் ஆடிய ஹர்திக் பாண்ட்யா 29 பந்துகளில் 38 ஓட்டங்கள் சேர்த்துள்ளார்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் சேர்த்தது.

வங்காளதேச தரப்பில் அந்த அணியின் ரிஷத் ஹசன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

(Visited 2 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி