ஐரோப்பா செய்தி

பிரான்சில் தங்க ஆய்வகத்தில் கொள்ளையில் ஈடுபட்ட ஆயுதமேந்திய குழு கைது

பிரான்ஸின் லியோனில்(Lyon) உள்ள தங்க சுத்திகரிப்பு ஆய்வகத்திற்குள் வெடிபொருட்களைப் பயன்படுத்தி இராணுவத் தர ஆயுதங்களுடன் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போர்க்வெரி(Pourquery) தங்க ஆய்வகத்திற்குள் நுழைந்த சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளை விரைவாகக் கைது செய்து, 12 மில்லியன் யூரோக்கள் ($13.8 மில்லியன்) என மதிப்பிடப்பட்ட கொள்ளைப் பொருட்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கொள்ளையின் போது ஐந்து ஊழியர்கள் காயமடைந்ததாகவும் அவர்களில் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனுபவம் வாய்ந்த குற்றவாளிகள் என்று நம்பப்படும் சந்தேக நபர்கள் அண்டை நகரமான வெனிசியூக்ஸில்(Venissieux) சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது

மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தாக்குதல் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த வாரம் லூவ்ரே(Louvre) அருங்காட்சியகத்தில் $102 மில்லியன் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த கொள்ளை இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி

லூவ்ரே (Louvre) கொள்ளை சம்பவம் – மேலும் 03 சந்தேகநபர்கள் கைது!

(Visited 2 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி