இலங்கை செய்தி

தாய் சித்திரவதை புரிவதாக யாழில் தஞ்சமடைந்த இந்திய சிறுவன்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து , பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுவன் மீள அவனது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த சிறுவன் ஒருவன் , தனது தாய் மற்றும் தாயின் இரண்டாவது கணவர் ஆகியோர் தன்னை அடித்து சித்திரவதை புரிவதாக கூறி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்திருந்தான்.

சிறுவன் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது , சிறுவன் வடஇந்தியாவை சேர்ந்தவன் எனவும் , அவனது தாய் கொழும்பில் கஸீனோவில் வேலை செய்வதாகவும் , இங்கு இலங்கையை சேர்ந்த நபருடன் தங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அதேவேளை , சிறுவன் மன்னார் சென்று அங்கிருந்து கடல் வழியாக இந்தியா செல்வதற்கு திட்டமிட்டு , கொழும்பில் இருந்து வெளியேறி மன்னார் பேருந்தில் ஏறுவதற்கு பதிலாக யாழ்ப்பாணம் செல்லும் பேருந்தில் ஏறியமையால், யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வந்த சிறுவனுக்கு எங்கே செல்வது என தெரியாததால் , பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளான்.

சிறுவனின் தாயை பொலிஸார் யாழ்ப்பாணம் அழைத்து விசாரணை செய்த வேளை சிறுவன் செய்யும் தவறுகளுக்கு தான் சிறுவனை தண்டிப்பதாக கூறியுள்ளார்.

அதனை அடுத்து சிறுவனை சமரசப்படுத்தி, தாயாரையும் எச்சரித்த பொலிஸார் , சிறுவனை தாயாருடன் கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!