வட கொரியாவிற்கு தப்பிச் சென்ற அமெரிக்க இராணுவ வீரர்! முதன் முறையாக வெளியான தகவல்
தென்கொரியாவில் இருந்து வடகொரியாவுக்கு தப்பிச் சென்ற அமெரிக்க இராணுவ வீரர், தனது காவலில் இருப்பதை வடகொரியா ஒப்புக்கொண்டுள்ளது.
இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த சிப்பாய் தொடர்பான தகவல்களை வழங்குமாறு வடகொரியாவிடம் இருந்து அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இது இடம்பெற்றுள்ளது.
அதன்படி, அந்த இராணுவ வீரர் தொடர்பாக வடகொரியா பதில் அளித்திருப்பது இதுவே முதல்முறை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், இராணுவ வீரருக்கு வடகொரியாவின் பதில் தொடர்பான மேலதிக தகவல்களை தற்போதைக்கு வெளியிட முடியாது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஆனால் அவரை மீண்டும் அழைத்து வர முயற்சிப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
23 வயதான அமெரிக்க இராணுவ வீரர் டிராவிஸ் கிங், கடந்த 18ம் திகதி தென் கொரியாவில் இருந்து வடகொரியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
அவர் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தபோது தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.