ஆசியா செய்தி

பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே கையெழுத்தான ஒப்பந்தம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல நாட்களாக நீடித்த வன்முறைக்கு பிறகு, மத்திய அரசும் போராட்டக்காரர்களும் நடந்து வரும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிரதமர் சவுத்ரி அன்வாருல் ஹக் தலைமையிலான பிராந்திய அரசாங்கம் கோதுமை மற்றும் மின்சாரத்திற்கு மானியம் வழங்குவதைத் தொடர ஒப்புக்கொண்டுள்ளது.

மேலும் அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் மற்றும் சுகாதாரம், கல்வி மற்றும் பிற பொது சேவைகளை மேம்படுத்துதல் தொடர்பான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளது.

பேச்சுவார்த்தையின் முடிவில் தான் முழுமையாக திருப்தி அடைவதாகவும், போராட்டங்கள் முடிவுக்கு வந்ததாகவும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் ஷௌகத் நவாஸ் மிர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 29 அன்று போராட்டக்காரர்களின் பிரதிநிதி அமைப்பான ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கைக் குழுவின் (JKJAAC) அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காததால் போராட்டங்கள் ஆரம்பித்தது.

(Visited 5 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி