கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரிய நடிகர் விஜய்
கடந்த மாதம் 27ம் திகதி தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின்(Tamilaga Vetri Kalagam) அரசியல் பேரணியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் குழந்தைகள் உட்பட 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் இன்று மகாபலிபுரத்தில்(Mahabalipuram) உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் துயர சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
மேலும், அவர்கள் அனைவருக்கும் கல்வி, சுயதொழில் மற்றும் வீட்டுவசதி உட்பட அனைத்து நிதி உதவிகளையும் செய்வதாக விஜய் உறுதியளித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கும் நடிகர் விஜய்





