இலங்கையில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகள் – 03 பேர் உயிரிழப்பு!
இலங்கையின் இருவேறு பகுதிகளில் இன்று (04.10) இடம்பெற்ற சாலை விபத்துகளில் மூன்றுபேர் பலியாகியுள்ளனர்.
ஹொரண-மொரகஹேன சாலையில் மொரகஹேன, கனன்வில பகுதியில் இன்று (04) பிற்பகல் நடந்த சாலை விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.
மொரகஹேனவிலிருந்து ஹொரண நோக்கிச் சென்ற லொறி ஒன்று, எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
படுகாயமடைந்த தம்பதியினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை கம்பஹா, மினுவாங்கொட சாலையில் இடம்பெற்ற விபத்தொன்றில் 15 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேகமாக வந்த லொறி ஒன்று அவர் மீது மோதியதாக நேரில் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்தை தொடர்ந்து லொறியின் சாரதி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக கம்பஹா பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.





