ஹஜ் யாத்திரையில் இணைந்த சுமார் 550 யாத்திரிகர்கள் மரணம்
இவ்வருடம் ஹஜ் யாத்திரையில் இணைந்த சுமார் 550 யாத்திரிகர்கள் கடும் வெப்பமான காலநிலையினால் ஏற்பட்ட பல்வேறு நோய்களினால் உயிரிழந்துள்ளனர்.
அதிக வெப்பம் காரணமாக மேலும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பநிலை 50 பாகை செல்சியஸிற்கு மேல் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இறந்தவர்களில் எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, ஈரான் மற்றும் செனகல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 550 யாத்ரீகர்களும் அடங்குவர்.
இந்நிலைமையினால் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ள பெருமளவிலான பதிவு செய்யப்படாத யாத்திரிகர்களை அகற்ற அதிகாரிகள் முயற்சித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இறந்தவர்களில் 323 பேர் எகிப்தியர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அந்த நாடுகளின் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
மெக்காவின் முக்கிய மசூதியில் வெப்பநிலை 51.8 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்துள்ளதாக சவுதி தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வெயிலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் குறைந்தது 240 யாத்ரீகர்கள் இறந்ததாக பல்வேறு நாடுகள் தெரிவித்துள்ளன, அவர்களில் பெரும்பாலோர் இந்தோனேசியர்கள் என தெரியவந்துள்ளது.