இலங்கை முக்கிய செய்திகள்

கொள்ளுப்பிட்டியில் பேரூந்து ஒன்றின் மீது விழுந்த மரம் – 5 பேர் மரணம்

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் பேரூந்து ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் டூப்ளிகேஷன் வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து மத்துகம நோக்கி பயணித்த பேரூந்து மீது கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து காரணமாக பேரூந்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் பொலிஸாரும் விமானப்படையினரும் ஈடுபட்டிருந்தனர்.

இன்று (06) காலை 6 மணியளவில் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

May be an image of 4 people, cable car, bus, Victoria Peak and text that says "U UE US"

May be an image of 4 people, motorcycle, scooter, road and street

May be an image of 6 people, tram, service vehicle, bus, lorry and text

May be an image of 4 people, bus, lorry and text

May be an image of limousine, bus, people carrier and rubbish

May be an image of 3 people, train, bus, tree and text

(Visited 28 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்