வீதிப் போக்குவரத்து விதியை மீறி சாரதி… கைது செய்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அமெரிக்க கனடிய எல்லைப் பகுதியில் வீதி போக்குவரத்து விதிகளை மீறிய சாரதி ஒருவரை கனடிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த நபரிடமிருந்து பெருந்தொகை கஞ்சா போதை பொருளும் பணமும் மீட்கப்பட்டுள்ளது.
அமெரிக்க சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.181 கிலோகிராம் எடையினுடைய கஞ்சா போதை பொருளும் சுமார் 6 லட்சம் டாலர் பணமும் இந்த நபரிடம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த கஞ்சா போதை பொருளின் சந்தை பெறுமதி சுமார் மூன்றரை லட்சம் டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் காரின் பல்வேறு பகுதிகளில் இந்த நபர் கஞ்சா போதை பொருளை மறைத்து வைத்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணச் சலவை மேற்கொள்ளும் நபர்கள் எவ்வாறு போதை பொருட்களை அல்லது பணத்தை பதுக்கி வைப்பார்களோ அந்த முறைமையில் குறித்த நபர் கஞ்சா மற்றும் பணத்தை பதுக்கி வைத்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்க கனடிய எல்லைப் பகுதியில் குறித்த நபர் வளைவு ஒன்றில் சட்டத்திற்கு முரணான வகையில் வாகனத்தை திருப்பியதால் கனடிய பொலிஸார் குறித்த நபரை பரிசோதனை இட்ட போது அவரிடம் இருந்து இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.