ஐரோப்பா செய்தி

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!

2027 ஆம் ஆண்டில் பிரித்தானியா மீண்டும் எராஸ்மஸ் (Erasmus student exchange scheme) மாணவர் பரிமாற்றத் திட்டத்தில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய உறவுகளுக்கான அமைச்சர் நிக் தாமஸ்-சைமண்ட்ஸ் (Nick Thomas-Symonds) இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் முதல் 100,000 பிரித்தானிய மாணவர்கள் பயனடைவார்கள் எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் பல்கலைக்கழகங்களில் 30 சதவீத தள்ளுப்படி  வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம்,  தனிநபர்கள் ஒரு வருடம் வரை பிற ஐரோப்பிய நாடுகளில் கல்வி பயில , பயிற்சி அளிக்க அல்லது தன்னார்வத் தொண்டு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி வழங்குகிறது.

2027 ஆம் ஆண்டிற்கான இந்தத் திட்டத்திற்கு இங்கிலாந்தின் பங்களிப்பு தோராயமாக £570 மில்லியன் ஆகும்.

போரிஸ் ஜான்சன் அரசாங்கத்தின் கீழ்  பிரித்தானியா எராஸ்மஸ் (Erasmus) திட்டத்தில் இருந்து விலகியது.  மாறாக டூரிங் திட்டத்தைத் தொடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!