வேற்றுக்கிரக வாசிகள் வாழந்திருக்கக்கூடும் என நம்பப்படும் கோள் ஒன்று கண்டுப்பிடிப்பு!

பூமியிலிருந்து சுமார் 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கோள் K2-18bயில் வேற்றுக்கிரகவாசிகள் வாழ்ந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை (JWST) தனது ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்திய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வானியல் நிறுவனத்தின் பேராசிரியர் நிக்கு மதுசூதன் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
“இதுதான் அங்கு உயிர் இருப்பதற்கான வலுவான சான்று. இந்த சமிக்ஞையை ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் நாம் உறுதிப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.
இந்த கோளின் வளிமண்டலத்தில் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கியமான மூலக்கூறுகள் – டைமெத்தில் சல்பைடு மற்றும் டைமெத்தில் டைசல்பைடு – இருப்பதாக நம்பப்படுகிறது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)