செய்தி விளையாட்டு

கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை – 19 பந்தில் போட்டியை முடித்த இங்கிலாந்து அணி

டி20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் புதிய சாதனையாக, இங்கிலாந்து அணி 19 பந்துகளில் ஒரு போட்டியை வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு நடைபெற்று கொண்டிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் மற்றொரு போட்டியாக தொடரின் 28-வது போட்டியாக இங்கிலாந்து அணியும், ஓமான் அணியும் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங் களமிறங்கிய ஓமான் அணி மிக மோசமான விளையாட்டை வெளிப்படுத்தியது. கிரிக்கெட்டில் நடந்து முடிந்த போட்டிகளின் ஹைலைட்ஸ் பார்ப்பது போல ஓமான் அணியின் பேட்டிங் அமைந்திருந்தது. அந்த அளவிற்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தது ஓமான் அணி.

இதன் மூலம் 13.2 ஓவர்களில் 47 ரன்களை மட்டுமே எடுத்து பரிதாபமான நிலையில் இருந்தது ஓமான் அணி. இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் இருவரும் தலா 3 விக்கெட்டுகளும், அடல் ரஷீத் 4 விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர்.

அதனை தொடர்ந்து பேட்டிங் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்த எளிய ஸ்கோரை முடிந்த அளவிற்கு வேகமாக அடிக்க வேண்டுமென தொடக்கத்தில் இருந்து எல்லா பந்துகளையும் பவுண்டரிகள் அடிக்க முயற்சித்தனர். அதிலும் ஜோஸ் பட்லர் 8 பந்துக்கு 24 ரன்கள் நடித்திருந்தார்.

வெறும் 3.1 ஓவர்களில் அதாவது வெறும் 19 பந்துகளிலேயே 2 விக்கெட்டை இழந்து 50 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதோடு, இந்த போட்டியை பயன்படுத்தி புள்ளிபட்டியலில் ரன் ரேட்டை உயர்த்தியுள்ளனர்.

இதனால் இங்கிலாந்து அணி அடுத்த போட்டியில் வெற்றி பெற்று ஸ்காட்லாந்து அணி அடுத்த போட்டியில் தோல்வி பெற்றால் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரில், வெறும் 20 பந்துகளுக்குள் ஒரு போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி புதிய சாதனையை படைத்துள்ளது.

(Visited 27 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி