ஐரோப்பா செய்தி

போர் கைதிகள் தலை துண்டிக்கப்பட்ட காணொளிகள் திகைப்பூட்டுவதாக ஐ.நா தெரிவிப்பு!

போர் கைதிகள் தலை துண்டிக்கப்பட்ட காணொளிகள் திகைப்பூட்டுவதாக ஐ.நா தெரிவிப்பு!

சமூக ஊடகங்களில் பரவி வரும் உக்ரேனிய இராணுவ வீரர்களின் தலையை துண்டித்துக் கொல்லும் கொடூரமான காணொளிகள் திகைப்பூட்டுவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

சமூக ஊடகத்தில் வைரலாகி வரும் இரு காணொளிகளில் ஒன்று, உக்ரேனிய போர் கைதி ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளதையும், மற்றொன்று தலை துண்டிக்கப்பட்ட உடல்கள் நிலத்தில் கிடப்பதையும் காட்டுகின்றன.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பு குழு, இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல எனக் குறிப்பிட்டுள்ளது.

போர்க் கைதிகள் உட்பட சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பல கடுமையான மீறல்களை சமீபத்தில் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகள் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி