பெய்ஜிங்கில் உள்ள இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் மீது தாக்குதல்
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், வெளிநாடுகளில் உள்ள இஸ்ரேல் குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு எகிப்தில் மூன்று இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் போலீஸ்காரரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் ஊழியர் ஒருவர் சமீபத்தில் அடையளந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த சம்பவம் தூதரகத்தை அண்மித்த பகுதியில் நடைபெறவில்லை எனவும் உள்ளூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தற்போது, காயமடைந்த ஊழியரின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்படுட்டுள்ளது.
காஸா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநாட்டில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும், அவதானமாக இருக்குமாறும் அந்நாடு அறிவித்துள்ள நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.