ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் உயிரிழப்பு
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு ஹுசைன் அல் ஹுசைனி அல் குராஷி இறந்துவிட்டதாக அந்த அமைப்பு உறுதி செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள இட்லிப் மாகாணத்தில் ஹயாத் தாரிர் அல்ஷாம் குழுவுடன் நேரடி மோதலின் பின்னர் ஐஎஸ் தலைவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தலைவரின் மரணம் குறித்த அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளரினால் பதிவு செய்யப்பட்ட டெலிகிராம் பதிவில் உயிரிழந்த திகதி குறிப்பிடப்படவில்லை.
எவ்வாறாயினும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவராக அபு ஹப்ஸ் அல் ஹாஷிமி அல் குராஷி நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
(Visited 16 times, 1 visits today)





