ஜெர்மனியில் சமூக உதவி தொகையில் மேலும் 100 யூரோ?
ஜெர்மனி நாட்டில் சமூக உதவி தொகை மீண்டும் 100 யூரோ அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் சமூக உதவி பணங்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் பல நலன்களை பெற்று வருகின்றனர்.
ஜெர்மனியில் சமூக உதவி பணமானது தற்பொழுது பேர்க கலட் என்ற பெயருடன் தனி நபருக்கு 502 யூரோ வழங்கப்பட்டு வருகின்றது.
இதேவேளையில் பல சமூக நல அமைப்புக்கள் இந்த மாதாந்த கொடுப்பனவை 725 யூரோவாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இந்நிலையில் மற்றுமொரு அமைப்பான சமூக வாழ்க்கைக்குரிய கூட்டமைப்பானது 725 யூரோவுக்கு மேலதிகமாக அவுஸ் க்கிளைக் கில்ட் என்று சொல்லப்படுகின்ற தற்போதைய பண வீக்கத்தையும் மற்றும் பொருட்களுடைய விலை ஏற்றத்தையும் சமன் செய்கின்ற மாதாந்தம் மேலதிக 100 யுரோக்களை கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வேண்டுதலை விடுத்து இருக்கினறது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது இவ்வருடம் உணவு பொருட்களுடைய விலை ஏற்றமானது 17.2 சதவீதமாக உள்ளதாகவும், இந்நிலையில் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற சமூக உதவி பணத்தில் இவ்வகையாக முயற்சிகள் ஏற்படுத்த வில்லை என்றும் இந்த அமைப்பானது சுட்டிக்காட்டி இருக்கின்றது.