ஐரோப்பாவிற்கு பயணம் செய்வது பாதுகாப்பானதா?
ஐரோப்பா முழுவதும் வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அந்த நாடுகளில் வரும் வாரங்களில் வெப்பநிலையானது 45C பதிவாகும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே அந்தநாடுகளுக்கு பயணம் செய்வது பாதுகாப்பானதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிரித்தானியாவின் விமான நிலையங்களில், பயண சேவைகள் தொடர்வதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், காலை 11 மணி முதல் பின்நேரம் 11 மணிவரை வெளியில் செல்ல வேண்டாம் எனவும், அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வெளியில் செல்லுமாறும் முன்னறிவிப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் மக்கள் அதிகமாக நீர் அருந்த வேண்டும் எனவும், சன்ஸ் க்ரீம்களை உபயோகிக்கும் படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வெளிவிவகார அலுவலகம் அதன் இணையதளத்தில் பயண ஆலோசனைகளை மக்கள் சரிபார்க்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.