இலங்கை

யாழில் 13ம் திருத்த சட்டம் தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வு

யாழில் அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் – இந்தியாவின் வகிபாகமும் குறித்த கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாண மத்திய கல்லூரி அருகிலுள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் நேற்று சனிக்கிழமை(15) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது.

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யாழ்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன், அகில இலங்கைத் தமிழர் மகாசபை தலைவர் கலாநிதி காசிலிங்கம் விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாக சி.தவராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் பூ.பிரசாந்தன்,இலங்கைத் தமிரசுக் கட்சி சார்பாக நிர்வாக செயலாளர் எக்ஸ்.குலநாயகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன்,தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் திருநாவுக்கரசு சிறீதரன்,சமத்துவக் கட்சி தலைவர் மு.சந்திரகுமார், ஈழவர் ஜனநாயக முன்னணி செயலாளர் நாயகம், இராஜநாதன் பிரபாகரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி பிரதிநிதி பா.கஜதீபன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்