இலங்கை சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி: கோபா குழு தெரிவிப்பு
நாட்டின் சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 300 முதல் 400 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கோபா குழு தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 11,762 கைதிகள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில், தற்போது 26,791 கைதிகள் உள்ளதாக கோபா குழு குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக சிறைகளில் 259 சதவீதம் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
17,502 கைதிகள் விளக்கமறியலில் உள்ளதாகவும், 9,289 கைதிகள் தண்டனை பெற்று வருவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்த முடியாத 1309 கைதிகளும் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 8 times, 1 visits today)